சுடச்சுட

  

  தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  தந்தை பெரியாரின் 138-ஆவது பிறந்தநாளையொட்டி புதுவை அரசு சார்பாக பிள்ளைத்தோட்டம் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் அரசு சார்பில் சனிக்கிழமை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட முதல்வர் நாராயணசாமி, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  பின்னர், திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பாளர்கள் சட்டப்பேரவை உறுப்பினர் சிவா, எஸ்.பி.சிவக்குமார் ஆகியோரும், அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் புருஷோத்தமன், ஓம்சக்தி சேகர் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.
  அதேபோல, திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பெரியார் சிலைக்கு மரியாதை செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai