சுடச்சுட

  

  பெரியார் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

  By DIN  |   Published on : 18th September 2016 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்காலில் பெரியார் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சர், எம்.எல்.ஏ.,சார்பு ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  புதுச்சேரி அரசின் சார்பில், ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அரசு சார்பில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் சார்பு ஆட்சியர் ஆர்.கேசவன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.பாஸ்கரன், மாவட்ட அதிமுக செயலர் எம்.வி.ஓமலிங்கம் உள்ளிட்ட அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடக் கழகத்தினர், சமாதானக் குழுவினர் பலரும் இதில் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai