சுடச்சுட

  

  முதல்வர், அமைச்சருக்கு பகுதி நேர ஊழியர்கள் பாராட்டு

  By DIN  |   Published on : 18th September 2016 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பள்ளிகளில் ரொட்டி, பால் வழங்கும் ஊழியர்களை பகுதி நேர ஊழியராக்கியமைக்காக புதுச்சேரி முதல்வர், அமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
  கல்வித் துறை ரொட்டி பால் ஊழியர்கள் சங்க காரைக்கால் மாவட்ட செயலர் ஆர்.சோமசுந்தரம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
  புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் பணியில், கடந்த 14 ஆண்டுகளாக மாநில அளவில் 850 ஊழியர்கள் பணியாற்றிவருகிறார்கள். இதில் 95 சதவீதம் பேர் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றர்களாக இருக்கின்றனர். ஊழியர்கள் பால் வழங்கும் பணிகள் மட்டுமல்லாது பள்ளியை சுத்தம் செய்வது, காய்கறி நறுக்கித் தருவது உள்ளிட்ட பல பணிகளை செய்கின்றனர்.
  இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் முறையாக இருப்பதில்லை. 16 மாதங்களுக்கு மேல் சம்பள நிலுவையும் உள்ளது. இதுகுறித்து ஊழியர் மத்திய கூட்டமைப்பு மூலம் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஆகியோரை சந்தித்து ஊழியர்கள் நிலை குறித்து விளக்கப்பட்டது. இதனடிப்படையில் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில், ரொட்டி பால் வழங்கும் ஊழியரை பகுதி நேர ஊழியராக்கி, மாத ஊதியமாக ரூ.6,500 வரை நிர்ணயித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ஊழியர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதல்வர், கல்வி அமைச்சர் ஆகியோருக்கு ஊழியர்கள் சார்பில் நன்றி, பாராட்டுகளை தெவித்துக்கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai