Enable Javscript for better performance
மோடி பிறந்த நாள்: குழந்தைகளுக்கு பாஜக பரிசு- Dinamani

சுடச்சுட

    

    மோடி பிறந்த நாள்: குழந்தைகளுக்கு பாஜக பரிசு

    By DIN  |   Published on : 18th September 2016 03:34 AM  |   அ+அ அ-   |    |  

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு சனிக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு பாஜக சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
    நரேந்திர மோடியின் 66-ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில், முல்லா வீதி பள்ளிவாசல், சுப்பையா சாலை இருதய ஆண்டவர் தேவாலயம் ஆகியவற்றில் வழிபாடு நடத்தப்பட்டது.
    மேலும், ராஜீவ்காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சனிக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடையுடன் கூடிய பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், சிறுபான்மையினர் அணி பொதுச் செயலாளர் ரசாலிகான், கட்சி நிர்வாகிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai