சுடச்சுட

    

    புதுவையில் வழக்குரைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    புதுவை வில்லியனுர் உத்திரவாகினிப்பேட்டையைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் (36). வழக்குரைஞர். இவர் சனிக்கிழமை திருபுவனையில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். ஆனால், வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
    இந்த நிலையில், ஒதியம்பட்டு ஐ.ஓ.சி. நிறுவன கிடங்கு பின்புறம் ரத்தக் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் வில்லியனூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் வழக்குரைஞர் மோகன்தாஸ் என்பது தெரியவந்தது.
    பழிக்கு பழி: புதுவை உத்திரவாகினிபேட்டையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (27) என்பவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது, சிலர் வந்து அவரை அரிவாளால் வெட்டினர். அதனை தடுக்க முயன்ற அவரது சகோதரி மாயாவதியையும் வெட்டினர். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    பாலகிருஷ்ணன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மோகன்தாஸுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மோகன்தாஸ் தரப்புக்கும் பாலகிருஷ்ணன் தரப்புக்கும் ஒரு அரசியல் அமைப்பில் இருந்தபோது முன்விரோதம் ஏற்பட்டு, மோகன்தாஸ் அதில் இருந்து விலகிவிட்டாராம்.
    இந்த முன்விரோதம் காரணமாக பாலகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது.
    அதற்குப் பழி வாங்கும் நோக்கில் மோகன்தாஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிந்து 4 பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai