சுடச்சுட

  

  விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை சட்டம் இயற்ற கோரிக்கை

  By DIN  |   Published on : 18th September 2016 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை, வேலையை உரிமையாக்கும் வகையில் சட்டம் இயற்றவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) கட்சி வலியுறுத்தியுள்ளது.
  காரைப் பிரதேச இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) கட்சி நிர்வாகி ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
  விவசாய, கிராமப்புற தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை, வேலை உறுதியை உரிமையாக்கும் வகையில் புதுச்சேரி அரசு சட்டம் இயற்றவேண்டும். தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாள்களை அதிகரிக்கவேண்டும். தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை நகர்புற ஏழைகளும் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தவேண்டும்.அரசு மூலம் வழங்கப்படும் இலவச வீட்டு மனைகளை 5 சென்ட் அளவுள்ளதாக உயர்த்தித் தர வேண்டும். புதுச்சேரியில் மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க வேண்டும். பண்டிகை காலங்களில் வழக்கம்போல் காலத்தோடு துணிகளாகவே வழங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் ஆர்.அழகப்பன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி மாநில பொதுச்செயலர் சோ.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார். காரைப் பிரதேச செயலர் ஏ.எஸ்.குமார் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட தலைவராக எஸ்.டி.சுகந்த், மாவட்ட செயலராக ஆர்.அழகப்பன், துணைத் தலைவராக கே.ராஜலட்சுமி, துணைச் செயலராக எஸ்.விஜயரசி, பொருளாளராக ஆர்.ஞானம்பாள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai