சுடச்சுட

  

  அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதலாக 274 இடங்கள்: புதுவை பல்கலை. அனுமதி

  By புதுச்சேரி  |   Published on : 19th September 2016 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதலாக 274 இடங்களை அதிகரிக்க புதுவை. பல்கலை அனுமதி அளித்துள்ளது.
  புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற புதுவை மாநில கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு கல்லூரிகளில் தேவையான இடங்கள் இல்லாததால் தகுதியுள்ள மாணவர்கள் மேல்படிப்பை தொடர முடியாத சூழல் இருந்தது.
  இதையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூடுதல் இடங்களை புதுவை மாநிலத்தில் இயங்கும் கல்லூரிகளில் உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
  இந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு ஒவ்வொரு கல்லூரியிலும் கூடுதல் இடங்களை உருவாக்கக் கொண்டார்.
  அதன் அடிப்படையில், புதுச்சேரி பல்கலைக்கழகம் 2016-17ஆம் கல்வியாண்டு அரசு கல்லூரிகள் மற்றும் அரசு சார்பில் இயங்கும் சொசைட்டி கல்லூரிகளில் கூடுதலாக 274 இடங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai