சுடச்சுட

  

  ஆளுநர், முதல்வருக்கு பிரெஞ்சிந்திய புதுச்சேரி விடுதலைக் கால மக்கள் இயக்கம் பாராட்டு

  By புதுச்சேரி,  |   Published on : 19th September 2016 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரெஞ்சிந்திய புதுச்சேரி விடுதலைக்கால மக்கள் நல நற்பணி இயக்கத்தின் பாராட்டு விழா சனிக்கிழமை புதுச்சேரியில் நடைபெற்றது.
   இயக்கத்தின் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டு நவம்பர் 1-ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 16ஆம் தேதி சுதந்திர விழாக்களுக்கு வெற்றி தேடி தந்தவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.
   இயக்கத் தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். அங்கப்பன் வரவேற்றார். நடேசன், வரதராஜலு, சுப்ரமணியன், தீனதயாளன், ஜானகிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
   தியாகி மஜித், சிவ இளங்கோ, வேல்முருகன், முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ராஜேந்திரன், விஜயவீரன் சிறப்புரை ஆற்றினர். சதாசிவம் நன்றி கூறினார்.
   விழாவில், மத்திய உள்துறை ஆணையேற்று கீழுர் நினைவு சின்னத்தில் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அரசு மரியாதையுடன் தேசியக்கொடி ஏற்றி, அரசு விடுமுறை தினமாக கடைபிடிக்கப்பட்டதற்காக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, தலைமை செயலர் மனோஜ் பரிதா, கவர்னரின் செயலர் தேவநீதிதாஸ், செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநர் உதயகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது,
   கடந்த 54 ஆண்டுகளாக பிரெஞ்சு குடியுரிமையை இழந்த புதுச்சேரி மக்கள் சிறப்பிக்கப்படவில்லை. எனவே, கடந்த கால புதுச்சேரி ஆட்சியாளர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பது, பிரெஞ்சு குடியுரிமை இழந்த மக்களுக்கு மத்திய அரசின் தியாகி பென்ஷன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க அரசிடம் கோருவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai