சுடச்சுட

    

    எல்எல்பி பாடப்பிரிவுகளுக்கு இன்று இறுதிக்கட்ட சென்டாக் கலந்தாய்வு

    By புதுச்சேரி,  |   Published on : 19th September 2016 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி சென்டாக் சார்பில் மூன்றாம் ஆண்டு எல்எல்பி (ககஆ) பாடப்பிரிவுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை காலாப்பட்டில் உள்ள பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
    இதுதொடர்பாக சென்டாக் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    புதுச்சேரியில் 5 ஆண்டுகள் பிஏ., எல்எல்பி., (இன்டகிரேட்ட்) சட்டப்படிப்புக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 13, ஆகஸ்ட் 22 ஆகிய தேதிகளில் நடந்தது.
    இதைத் தொடர்ந்து, 3 ஆண்டு எல்எல்பி முதற்கட்ட கலந்தாய்வு கடந்த ஆக.31-ஆம் தேதி நடந்தது.
    இந்நிலையில் எல்எல்பி பாடப்பிரிவில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நடக்கிறது. அதன்படி, காலை 9 மணிக்கு 79.281 முதல் 64.737 வரை கட்ஆப் மதிப்பெண் எடுத்த பிற மாநிலத்தவருக்கான கலந்தாய்வு நடக்கிறது.
    தொடர்ந்து 9.15 மணிக்கு எஸ்சி பிரிவு மாணவர்களுக்கும், 9.30 மணிக்கு 88.228 முதல் 46.357 வரை கட்ஆப் மதிப்பெண் எடுத்த புதுச்சேரி அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் எல்எல்பி கலந்தாய்வு நடக்கிறது.
    மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதள முகவரி www.centaconline.in- இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாமல் தரவரிசைப் பட்டியல் மதிப்பெண் வரம்புக்குள் வரும் தகுதியான விண்ணப்பதாரர்களும், தங்கள் அசல் மற்றும் ஒரு செட் நகல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
    கலந்தாய்வில் பங்கேற்கும் எஸ்சி மற்றும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் ரூ.300க்கும், இதர பிரிவினர் ரூ.750க்கான வரைவோலையை (The Convenor, CENTAC) புதுச்சேரியில் செலுத்தத்தக்க வகையில் கொண்டு வர வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai