சுடச்சுட

  

  குப்பையை தெருவில் கொட்டிய மதுக்கடையின் உரிமத்தை ரத்து செய்ய ஆளுநர் உத்தரவு

  By புதுச்சேரி,  |   Published on : 19th September 2016 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குப்பைக் கழிவுகளை தெருவில் கொட்டிய மதுபானக்கடையின் உரிமத்தை தாற்காலிகமாக ரத்து செய்ய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
   வில்லியனூர் அடுத்த கோட்டை மேடு கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஆய்வுக்குச் சென்ற கிரண்பேடி, அங்கு உறுவையாறு படுகை அணையில் நீர்பிடிப்பு பகுதியை பார்வையிட்டார். அப்போது கூடிய பொதுமக்கள் ஆளுநரின் செயல்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
   மேலும், உள்ளூர் இளைஞர்கள் கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆளுநருக்கு மனு அளித்தனர்.
   இதனைத்தொடர்ந்து கோட்டைமேடு வீதிகளில் நடந்து சென்ற கிரண்பேடியிடம் அப்பகுதியில் உள்ள ஒரு மதுபானக் கடையின் கழிவுகள் காலிமனையிலும், வீதியிலும் வீசப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
   இது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட ஆளுநர், அந்த மதுபானக் கடையின் உரிமத்தை தாற்காலிகமாக ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai