Enable Javscript for better performance
ஜான்குமார் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளிக்கும்: அன்பழகன்- Dinamani

சுடச்சுட

    

    ஜான்குமார் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளிக்கும்: அன்பழகன்

    By புதுச்சேரி,  |   Published on : 19th September 2016 09:33 AM  |   அ+அ அ-   |    |  

    பதவியை ராஜிநாமா செய்த ஜான்குமார் மீது விரிவான விசாரணை நடத்திய பிறகே இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தேர்தல்
     ஆணையத்தில் அதிமுக புகார் அளிக்கும் என புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன்
     எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
     இதுகுறித்து அவர், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த ஜான்குமார் வீட்டில் நடத்திய சோதனையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம், கோப்புகள் குறித்து வருமான வரித்துறையினர் அறிவிக்க வேண்டும். மேலும் ஜான்குமாருக்கு நெருக்கமான நண்பர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும்.
     வியாபாரத்துக்காக பலமுறை வெளிநாடுகளுக்கு ஜான்குமார் சென்று வந்துள்ளார். இதில் பெறப்பட்ட லாபம் குறித்து அரசுக்கு தெரிவித்துள்ளாரா என அமலாக்கத் துறையினரும் விசாரணை நடத்த வேண்டும்.
     அவர் மீதான விரிவான விசாரணை நடத்திய பிறகே இடைத்தேர்தல் அறிவிப்பை மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.
     இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், அமலாக்கப்பிரிவுக்கு அதிமுக சார்பில் புகார் கடிதம் அனுப்பப்படும் என்றார் அன்பழகன்.
     

    kattana sevai