சுடச்சுட

    


    புதுவையில், மயானம் அருகே தலையில் கல்லைப்போட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     புதுவை அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சரவணன் (35). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, பெர்னர்ட் மேரி என்ற மனைவியும், பூபாலன், சரண்யா ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர். சரவணன் சரிவர வேலைக்குச் செல்லாமல், மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தாராம்.
     இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காக்காயங்தோப்பு மயானம் அருகே, சரவணன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அரியாங்குப்பம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். மதுபோதையில் தகராறு காரணமாக நள்ளிரவில் சரவணனை யாரேனும் தலையில், கல்லைப் போட்டு கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai