சுடச்சுட

  

  நீட் தேர்வு குறித்த தீர்ப்பு வரும் வரை கல்விக்கட்டணம் செலுத்த வேண்டாம்: சென்டாக் மாணவர்-பெற்றோர் சங்கம்

  By புதுச்சேரி,  |   Published on : 19th September 2016 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரவோ, கல்வி கட்டணம் செலுத்தவோ வேண்டாம் என சென்டாக் மாணவர்-பெற்றோர் நலச்சங்கத் தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
   அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
   அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான தகுதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் ஆக.16-இல் வெளியிடப்பட்ட போதிலும், தேர்வு பெற்றவர்களின் அகில இந்திய மதிப்பெண் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படவில்லை. மேலும், எந்தவித வழிகாட்டுதலும் இல்லை என்று புதுச்சேரி அரசும் கூறி வருகிறது. இதனால் புதுச்சேரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
   இதனிடையே, இந்த சூழலை பயன்படுத்தி, தனியார் மருத்துவக் கல்லூரிகள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல கட்டணம் வசூலித்து, வெளிமாநில மாணவர்களை சேர்த்து வருகின்றன.
   இந்த நிலையில், மாணவர்கள்-பெற்றோர்கள் நலச்சங்க கூட்டுக்குழு நீட் சார்பாக, பள்ளி மற்றும் உயர்கல்வி பெற்றோர்-மாணவர்கள் நலச்சங்கத்தின் தலைவரும் வழக்குரைஞருமான சுப்பிரமணியன், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த கூடாது என்றும் மாநில அரசுக்கு உரிய வழிகாட்டுதல் தர வேண்டியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
   அந்த வழக்கை உச்சநீதிமன்றம் வருகிற செப்.19இல் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உள்ளது. மேலும், நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களை மத்திய, மாநில அரசுகள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்றும் நிகர்நிலைப் பல்கலை. மருத்துவக் கல்லூரிகள் தன்னிச்சையாக தேர்வு செய்யக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த 16-ஆம் தேதி இடைக்கால தடைவித்துள்ளது. எனவே, மாணவாóகள் யாரும் வழக்கின் தீர்ப்பு வரும் வரை கட்டணம் கட்டவோ அல்லது கல்லூரியில் சேரவோ வேண்டாம் என தெரிவித்துள்ளார் நாராயணசாமி.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai