சுடச்சுட

  

  புதுச்சேரி அருகே 2 இடங்களில் வைக்கப்பட்டிருந்த பாஜக மற்றும் பாமக பதாகைகள் கிழிக்கப்பட்டதால், அக்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டன.
   பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, மரக்காணம் ஒன்றிய துணைத்தலைவர் மணிவண்ணன் மற்றும் பாஜகவினர் கீழ்புத்துப்பட்டு, கிழக்கு கடற்கரைச் சாலையில் வாழ்த்து தெரிவித்து பதாகை வைத்திருந்தனர். இதனை மர்ம நபர்கள் சனிக்கிழமை இரவு கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்.
   இதனைக் கண்டித்து பாஜகவினர் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கோட்டக்குப்பம் போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்ட பாஜகவினர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
   பாமக பேனர் கிழிப்பு-மறியல்: இதேபோல், பாமக சார்பில் வீரவணக்க நாளையொட்டி திருவண்டார் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாகையும் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
   இதனை கண்டித்து பாமகவினர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பாமக நிர்வாகிகள் முனியன், ஆறுமுகம், மாறன், தேசிங்கு, ஜெகநாதன், முத்து உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai