சுடச்சுட

  

  பொலிவுறு நகரத் திட்டத்தில் புதுச்சேரி: அடுத்த ஆண்டு மார்ச்சில் திட்ட வரைவு வழங்க முடிவு

  By புதுச்சேரி,  |   Published on : 19th September 2016 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொலிவுறு நகரத் திட்டத்தில் புதுச்சேரியை சேர்ப்பது தொடர்பான திட்ட வரைவு வருகிற 2017 மார்ச் மாதம் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகத்திடம் வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது.
   பொலிவுறு நகரத் திட்டத்தில் உழவர்கரை நகராட்சியை சேர்ப்பது தொடர்பாக அனுப்பப்பட்ட திட்ட வரைவை மாற்றி அனுப்புமாறு மத்திய அரசு கூறி விட்டது.
   இந்த நிலையில் பொலிவுறு நகர திட்டத்தில் புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சிகள் இரண்டையும் இணைத்து புதிய திட்ட வரைவை தயாரிக்க மாநில அளவில் உயர்மட்ட குழு தலைமைச் செயலர் மனோஜ் பரிதா தலைமையில் அமைக்கப்பட்டது.
   இத்திட்டத்தின் நிலை குறித்த, குழுவின் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி நகருக்கான பொலிவுறு நகரத் திட்ட வரைவை, நகர குடிமக்களை இணைத்து தயாரிக்க வேண்டும். தற்போதுள்ள நகரை புனரமைப்பது, மீண்டும் வளர்ச்சி காணச் செய்வது, நகர போக்குவரத்து, சுற்றுலா, பாரம்பரியம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், கேளிக்கை, சிறப்பு அம்சங்களை உள்ளடக்கி இருக்கும்.
   இதுதொடர்பாக ஆன்லைன் மூலம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்படும். மேலும் வீடு வீடாகவும் புதுவை நகராட்சியின் பல்வேறு வார்டுகளில் மக்களிடம் கருத்துக் கேட்கப்படும். நகர்ப்புற மக்களின் கருத்துகளுக்கு ஏற்ப அவை சேர்க்கப்பட்டு ஒருங்கிணைந்த பொலிவு நகர திட்ட வரைவு தயாரிக்கப்படும். அதை வருகிற 2017 மார்ச் மாதம் வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai