சுடச்சுட

    

    புதுவை அருகே மதுபானக் கூடத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில், தொழிலாளி பாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
     புதுவை நெட்டப்பாக்கத்தை அடுத்த மடுகரை ராம்ஜி நகர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (40). மதுபானக் கூடத்தில் சர்வராக பணிபுரிந்து வந்த இவர், கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு கூலித் தொழிலாளியான சங்கரலிங்கம் (52) என்பவருக்கும் ஏற்கெனவே அறிமுகம் இருந்துள்ளது.
     சனிக்கிழமை இரவு, ராம்ஜி நகர் அருகிலுள்ள மதுபானக் கூடத்துக்கு ராமமூர்த்தி சென்றுள்ளார். அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த சங்கரலிங்கத்திடம் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சங்கரலிங்கம், பீர்பாட்டிலை எடுத்து ராமமூர்த்தியின் முகம் மற்றும் தலையில் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராமமூர்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நெட்டப்பாக்கம் போலீஸார், சங்கரலிங்கத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai