சுடச்சுட

  

  மனிதவளத் துறை குறித்த தகவல்களை ஆவணப்படுத்த வேண்டும்: ஐஎஸ்டிடி தேசியத் தலைவர் வலியுறுத்தல்

  By புதுச்சேரி,  |   Published on : 19th September 2016 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மனிதவளத் துறை குறித்த தகவல்களை அனைவரும் ஒருங்கிணைந்து ஆவணப்படுத்த வேண்டும் என புதுச்சேரியில் நடந்த தமிழ் மனித வள மாநாட்டில் ஐஎஸ்டிடி தேசியத் தலைவர் ஆர்.கார்த்திகேயன் வலியுறுத்தினார்.
   இந்திய பயிற்சி மற்றும் வளர்ச்சிக் கழகம் (ஐஎஸ்டிடி) நடத்தும் 2-ஆவது தமிழ் மனித வள மாநாடு, புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் உள்ள தனியார் ஓட்டலில் சனிக்கிழமை தொடங்கியது. மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அதில் பங்கேற்ற ஐஎஸ்டிடி தேசியத் தலைவர் ஆர்.கார்த்திகேயன் பேசுகையில்: இயந்திரவியல், கணினி அறிவியல், பொறியியல், உள்பட பல்வேறு துறைகளின் அம்சங்கள், வரலாறு, சிறப்புகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் முக்கிய துறையாகத் திகழும் மனித வளத்துறைக்கு தொடர்பாக எந்த விவரங்களும் ஆவணப்படுத்தப்படவில்லை.
   இனிமேல் அனைவரும் இதில் கவனம் செலுத்தி மனிதவளத் துறை தொடர்பான தகவல்களை ஆவணப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றார்.
   மனிதவளத் துறையின் சவால்களும் வாய்ப்புகளும், மனிதவளத் துறை என்ன செய்ய வேண்டும், திறன் வளர்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, தமிழ் சூழலில் மனித வள ஆற்றல் மேம்பாடு எனும் தலைப்புகளில் பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன.
   இரண்டாம் நாள் நிகழ்வில் டாபே மனிதவளத் துறை தலைவர் முத்துக்குமார் தாணு,
   தமிழ் ஹிந்து நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன், ஊடகவியலாளர்கள் ராஜ்மோகன், நிரஞ்சன் பாரதி, எஸ்.பி.வேணுகோபால் ஆகியோர் உரையாற்றினர்.
   செயலர் ஏ.எஸ்.கோவிந்தராஜூலு, ஆலோசகர் டி.வி.சுப்பாராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai