சுடச்சுட

  

  காவிரி நீரை எதிர்பார்த்து சாகுபடியை தொடங்கிய  காரைக்கால் விவசாயிகள்

  By  காரைக்கால்,  |   Published on : 20th September 2016 02:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  agriculture

  காவிரி நீரை எதிர்நோக்கி, காரைக்காலில் சம்பா சாகுபடி பணிகளை ஆங்காங்கே விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

   காரைக்கால் கடைமடைப் பகுதிக்கு காவிரி நீர் 6 டி.எம்.சி. தரவேண்டுமென்பது நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு. இது எந்த காலக்கட்டத்திலும் உரிய அளவில் காரைக்கால் பகுதிக்கு வந்து சேர்ந்ததில்லை. பருவமழைக் காலத்தில் திறந்துவிடப்படும் உபரிநீர் மட்டுமே காரைக்கால் வழியாக கடலில் சென்று கலக்கிறது. இது தவிர, வேளாண் பருவத்தில் தண்ணீர் காரைக்காலுக்கு உரிய அளவில் கிடைப்பதில்லை என்பது விவசாயிகள் கருத்து.

   கடந்த 2015ஆம் ஆண்டு காரைக்கால் பகுதி எல்லைக்குள் காவிரி தண்ணீர் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நுழைந்தது. நிகழாண்டு செப்.20-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்தால் மட்டுமே காரைக்கால் கடைமடைப் பகுதிக்கு உரிய தண்ணீர் வந்து சேருமென விவசாயிகள் கூறுகின்றனர்.

   எனினும், காரைக்கால் மாவட்டத்தில் சம்பா பயிர் செய்வதற்கான ஆயத்தப் பணிகளை விவசாயிகள் செய்துகொண்டிருக்கின்றனர்.

   அம்பகரத்தூர், திருநள்ளாறு, பேட்டை, பூமங்களம், நெடுங்காடு, மேலகாசாக்குடி, கோட்டுச்சேரி உள்ளிட்ட விளைநிலப் பகுதிகளில் விவசாயிகள் பரவலாக முன்னேற்பாடுகளை செய்துவருகின்றனர். திருநள்ளாறு அருகே பூமங்களம் கிராமத்தில், திருநள்ளாறு கோயில் தீர்த்தங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரை, மோட்டார் பம்பு மூலம் விளைநிலப் பகுதிக்குள் பாய்ச்சி, நாற்றாங்கால் அமைக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai