சுடச்சுட

  

  குண்டு வெடித்த வழக்கில் 2 பேர் கைது: ரெளடிகளை கொல்ல வீட்டில் பதுக்கியது அம்பலம்

  By புதுச்சேரி,  |   Published on : 20th September 2016 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில், பாழடைந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்த வழக்கில், 2 பேரை போலீஸார் கைது செய்தனர். ரெளடியை கொலை செய்வதற்காக பதுக்கப்பட்ட குண்டு வெடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
   புதுவை முதலியார்பேட்டை லட்சுமி நகர் சுந்தரராஜ தெருவில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் கடந்த 16ஆம் தேதி இரவு நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் காயமடைந்தனர்.
   இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த குமரன் (22), பூபதி (20) ஆகிய இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
   இது குறித்து முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் கூறியது: அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக வதந்தி இருந்து வந்த அந்த பாழடைந்த வீட்டுக்குள் சிவா, பிரவீன் ஆகிய இளைஞர்கள் பந்தயம் கட்டி செல்ல முயன்றனர். அவர்களை அதே தெருவைச் சேர்ந்த குமரன், பூபதி ஆகியோர் உள்ளே செல்ல வேண்டாம் என்று தடுத்துள்ளனர்.
   ஆனால் சிவா, பிரவீன் உள்ளே சென்றனர். அப்போது, அங்கு இருந்த ஒரு பையை எடுத்த இருவரும் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 வெடிகுண்டுகள் வெடித்ததில் காயமடைந்தனர்.
   இதுதொடர்பாக தலைமறைவான குமரன், பூபதி ஆகியோரை முதலியார்பேட்டை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரெளடிகள் விக்கி, வினோத் ஆகியோர் வெடிகுண்டுகள் அடங்கிய பையை, ஜூலை மாதம் தங்களிடம் கொடுத்து பாழடைந்த வீட்டில் பதுக்கி வைக்குமாறு கூறியதாக தெரிவித்தனர்.
   ரெளடியும் சிறைக் கைதியுமான மர்டர் மணிகண்டனின் கூட்டாளியாக இருந்து தற்போது தனித்து இயங்கும் வானரப்பேட்டையைச் சேர்ந்த ரெளடி ஐயப்பனை, அஷ்வின் என்பவர் கூறியதன்பேரில் கொலை செய்வதற்காக, இந்த வெடிகுண்டுகளை ரெளடிகள் விக்கி, வினோத் அறிவுறுத்தலின்பேரில் பதுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
   விக்கி, வினோத்தை கைது செய்தால், மர்டர் மணிகண்டனுக்கு இதில் தொடர்பு உள்ளதா, வெடிகுண்டுகள் எங்கு வாங்கப்பட்டன போன்ற தகவல்கள் தெரியவரும். எனவே, இருவரையும் தேடி வருகிறோம் என்றார் ராஜீவ்ரஞ்சன்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai