சுடச்சுட

  

  சுனாமி நிவாரண நிதி முறைகேடு: சிறப்பு விசாரணைக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

  By புதுச்சேரி,  |   Published on : 20th September 2016 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மாநிலத்தில் சுனாமி நிவாரண நிதி முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் முருகன் வலியுறுத்தி உள்ளார்.
   இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: சுனாமி நிவாரணத்துக்கு வந்த மொத்த நிதி எவ்வளவு? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கோரினேன். பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு மொத்தம் ரூ.886 கோடி வந்தது என நிர்வாகத் தரப்பில் பதில் தந்தனர்.
   இதில் பல்வேறு வகைகளில் மொத்தம் ரூ.246 கோடி செலவிடப்பட்டதாகக் கணக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் மீதித் தொகைக்கு எந்த விவரத்தையும் அரசு நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
   சுனாமி நிவாரணம் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன என வந்த புகார்களின் அடிப்படையில் ஏற்கெனவே ரூ.35 கோடி மதிப்பில் முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
   சுனாமி முறைகேடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் ஆதரவு எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பிய போது, சுனாமியில் ஊழல் நடந்துள்ளது என முதல்வரும், அமைச்சர் ஷாஜஹானும் ஒப்புக் கொண்டனர்.
   இதுதொடர்பாக நான் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் சுனாமி முறைகேடுகள் தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
   எனவே, சுனாமி நிவாரண நிதி தொடர்பாக நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிறப்பு விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றார் முருகன்.
   பிரதேசச் செயலர் ஆர்.ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வி.பெருமாள் உடனிருந்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai