சுடச்சுட

  

  "தனியார் பங்களிப்புடன் 300 பேருந்துகளை வாங்க அரசு பரிசீலனை'

  By புதுச்சேரி,  |   Published on : 20th September 2016 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் தனியார் பங்களிப்புடன் 300 பேருந்துகளை வாங்க அரசு பரிசீலித்து வருவதாகவும், இதற்காக "புடா' என்ற புதுச்சேரி நகர்ப்புற போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்படும் என்றும் வருவாய்த் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான் தெரிவித்தார்.
   இதுகுறித்து அவர், புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழகம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பல்வேறு வெளிமாநிலங்கள், உள்ளூர் சேவைகளை தொடங்க 300 பேருந்துகள் கூடுதலாக தேவைப்படுகிறது. ஆனால் அரசால் இந்த அளவு பேருந்துகளை வாங்க முடியாது. கூடுதலாக ஊழியர்களையும் நியமிக்க முடியாது.
   எனவே, தனியாரை இதில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். பேருந்துகளின் உரிமங்கள் அரசு வசமே இருக்கும். பேருந்துகள், ஊழியர்கள், அதன் பராமரிப்பு போன்றவை தனியாரிடம் இருக்கும். இதற்காக கட்டணத்தை நிர்ணயித்து அரசு வசூலிக்கும். அதே போல் சொகுசு பேருந்துகளை இயக்கவும் கோரிக்கைகள் வருகின்றன.
   இவையும் தனியார் மூலமே மேற்கொள்ளப்படும். பேருந்து உரிமங்கள் அரசின் வசமே இருக்கும்.
   இதற்காக "புடா' என்ற புதுச்சேரி நகர்ப்புற போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்படும்.
   பொதுச்சேவை மையங்கள் மூலம் ஏற்கெனவே பட்டா, உள்ளிட்டவை தரப்படுகின்றன. தற்போது புலவரைபடம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சான்றுகள் வழங்குவதற்காக பொதுச் சேவை மையத்தில் ரூ.50 வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ.25 அரசுக்கு கிடைக்கும்.
   அரசுத் துறைகளில் காகித பயன்பாடே இல்லாத வகையில் இ-ஆபிஸ் எனப்படும் திட்டத்தின் மூலம் கோப்புகளை ஆன்லைன் மூலமே கண்டறியும் முறை அறிமுகம் செய்யப்படும். இத்திட்டம் தேசிய தகவலியல் மையம் மூலம் 6 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்றார் ஷாஜஹான்.
   ஆட்டோ கட்டண நிர்ணயம்:
   அடுத்த வாரம் நடவடிக்கை
   அமைச்சர் எப்.ஷாஜஹான் மேலும் கூறியதாவது: ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் பிரச்னை தொடர்பாக உரிய முடிவெடுக்க அடுத்த வாரம் அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் கூட்டத்தை அரசு கூட்டும். அதில் அனைவரின் கருத்துகள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
   என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai