சுடச்சுட

  

  பாகிஸ்தானை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

  By புதுச்சேரி/காரைக்கால்  |   Published on : 20th September 2016 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டிக்கும் விதத்தில் காரைக்காலில் பாஜகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
   ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி என்ற பகுதியில் உள்ள ராணுவ படைப் பிரிவு தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் 17 பேர் உயிரிழந்தனர்.
   பயங்கரவாதிகளின் இந்த செயலைக் கண்டிக்கும் வகையில், புதுச்சேரி காமராஜர் சிலை அருகே பாஜகவினர், மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு பாகிஸ்தானை கண்டித்து குரலெழுப்பினர்.
   இதேபோல காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் ஜி.கணேஷ் தலைமை வகித்தார். இந்த கொடுஞ்செயலை செய்தோரை இந்திய அரசு, தப்பிக்கவிடாமல் பிடித்து நீதியின் முன் நிறுத்தவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் வலியுறுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai