சுடச்சுட

  

  புதுவையில் நாளை ஆட்டோக்கள் வேலைநிறுத்தம்

  By புதுச்சேரி,  |   Published on : 20th September 2016 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் செப்.21ஆம் தேதி (புதன்கிழமை) வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
   இது குறித்து புதுச்சேரி மாநில அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டுப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
   புதுவையில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நிலையங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறோம். மேலும் ஆட்டோ கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.40 ஆக நிர்ணயித்து, ஒரு கி.மீ.க்கு ரூ.20 என நிர்ணயிக்க வேண்டும்.
   மேலும், ஜிபிஆர்எஸ் மீட்டர்களை தமிழகத்தில் வழங்குவது போல புதுவையிலும் இலவசமாக வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி ரூ.5000 வழங்க வேண்டும்.
   இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புதுவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதில் புதுவையில் உள்ள 4 ஆயிரம் ஆட்டோ ஓட்டுநர்களும் அனைத்து ஆட்டோ சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரும் கலந்து கொள்வர். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோக்களும் ஓடாது.
   அன்றைய தினம் புதுவையில் உள்ள அனைத்து ஆட்டோக்களையும் ஏ.எஃப்.டி. மில் மைதானத்தில் நிறுத்தி விட்டு, பேரணியாக சட்டப்பேரவை நோக்கி ஓட்டுநர்கள் சென்று, 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கிய மனுவை முதல்வரிடம் அளிப்போம் என்றார் அவர். இந்த சந்திப்பின் போது பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai