சுடச்சுட

  

  பொதுசேவை மையங்கள் மூலம் புல வரைபடம் பெறும் திட்டம்: அமைச்சர் ஷாஜகான் தொடங்கி வைத்தார்

  By புதுச்சேரி,  |   Published on : 20th September 2016 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மாநிலத்தில் பொதுசேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் புலவரைபடம் பெறும் திட்டத்தை வருவாய்த் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
   பொதுமக்களுக்கு புல வரைபட நகல்கள் பொதுசேவை மையங்கள் மூலம் வழங்கப்
   படும் என சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் அறிவித்திருந்தார்.
   இதன்படி நில அளவைத் துறை, தேசிய தகவல் மையம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மாநிலத்தில் அனைத்து நில அளவை பதிவேடுகளையும் கணினிமயமாக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
   நிலமகள் என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டு ஏற்கெனவே நில பட்டா நகல் செட்டில்மெண்ட்நகல் போன்றவை தரப்பட்டு வருகின்றன.
   இதன் தொடர்ச்சியாக தற்போது அனைத்து வருவாய் கிராமங்களிலும் புலவரைபட நகல்களும் கணினிமயமாக்கப்பட்டு ஆன்லைனில் பொதுசேவை மையங்கள் மூலம் தரப்படுகின்றன.
   இந்தத் திட்டத்தை சட்டப்
   பேரவை வளாகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜஹான் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு புலவரைபட நகலை வழங்கினார்.
   மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத், தேசிய தகவலியல் மைய அதிகாரி டிஆர்.சுக்லா, தகவல் தொழில்நுட்பத் துறை இயக்குநர் எஸ்.சிவக்குமார், நில அளவைப் பதிவேடுகள் துறை இயக்குநர் ஆபேல் ரொசாரியோ, துணை மாவட்ட ஆட்சியர்கள் பா.தில்லைவேல், ந.உதயகுமார் பங்கேற்றனர்.
   பொதுமக்கள் புல வரைபட நகலைப் பெற உட்பிரிவு எண் வருவாய் கிராமம், தாலுகா விவரங்கள் மறறும் ரூ.50 செலுத்தி 50 பொதுச்சேவை மையங்கள் மூலம் நகலை பெறலாம். வரைபடமாக வழங்கப்படுவதால் கையெழுத்து முத்திரை எதுவும் தேவையில்லை.
   சான்று நகலின் நம்பகத்தை தன்மையை அறிய ட்ற்ற்ல்ள்:ல்ன்க்ன்ஸ்ஹண்ள்ங்ஸ்ஹண்.ல்க்ஹ்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையத்தில் புல வரைபட நகல் பாதுகாப்பு குறியீட்டை அளித்து சரிபார்க்கலாம்.
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai