சுடச்சுட

  

  மனைவியைக் கொன்று முதியவர் தற்கொலை: புதுச்சேரியில் சம்பவம்

  By புதுச்சேரி,  |   Published on : 20th September 2016 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில், 80 வயது மனைவியை கழுத்தறுத்துக் கொன்று, முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
   புதுவை, லாஸ்பேட்டை அருகே கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (85), கூலித் தொழிலாளி. இவரது மனைவி புஷ்பவள்ளி (80). இவர்களுக்கு 7 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் ஒரு மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மற்றவர்கள் திருமணமாகி, அதே பகுதியைச் சுற்றி குடும்பத்துடன் வசிக்கின்றனர். ஆறுமுகமும் புஷ்பவள்ளியும் சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.
   இந்த நிலையில், திங்கள்கிழமை காலை நீண்டநேரமாகியும், இவர்களின் வீட்டுக் கதவு திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தார் சந்தேகமடைந்து, கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஹாலில் தூக்குப்போட்ட நிலையில் ஆறுமுகமும், அறைக்குள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் புஷ்பவள்ளியும் இறந்து கிடந்தனர்.
   தகவலறிந்த லாஸ்பேட்டை ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
   காரணம் என்ன? முதுமை காரணமாக புஷ்பவள்ளி, சில நாள்களாக சமையல் செய்யாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆறுமுகம், புஷ்பவள்ளியைக் கொன்று விட்டு, தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. மேலும், குடும்பத்தில் சொத்து பிரச்னையும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai