Enable Javscript for better performance
வேளாண் விற்பனைக்குழுச் செயலர் அலுவலகத்துக்குப் பூட்டு ஊழியர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வேளாண் விற்பனைக்குழுச் செயலர் அலுவலகத்துக்குப் பூட்டு ஊழியர்கள் போராட்டம்

    By புதுச்சேரி,  |   Published on : 20th September 2016 08:54 AM  |   அ+அ அ-   |    |  

    சம்பள நிலுவையை வழங்க வலியுறுத்தி புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட செயலர் அலுவலகத்துக்கு ஊழியர்கள் திங்கள்கிழமை பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     விவசாயிகளின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட அரசுத் துறை நிறுவனமான புதுச்சேரி வேளாண் விற்பனைக்குழு.
     இதன் செயலர், அரசு நிதித்துறை மற்றும் அத்துறையின் செயலர் அனுமதி பெறாமல் பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதேபோல் அங்குள்ள 174 ஊழியர்களுக்கும் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ஊதியத்தை வழங்கவில்லை எனக்கூறியும் இப்போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
     அப்போது அவர்கள், ஊதியம் கிடைக்கும் வரை பல்வேறு போராட்டங்களை நடத்தப்போவதாக தெரிவித்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai