Enable Javscript for better performance
22-இல் தலைமைச் செயலகம் முற்றுகை: மார்க்சிஸ்ட் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    22-இல் தலைமைச் செயலகம் முற்றுகை: மார்க்சிஸ்ட் அறிவிப்பு

    By புதுச்சேரி,  |   Published on : 20th September 2016 09:08 AM  |   அ+அ அ-   |    |  

    தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத ஒதுக்கீடு, நீட் தேர்வு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி 22-ல் தலைமைச் செயலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் தெரிவித்துள்ளார்.
     அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: புதுச்சேரியில் 3 தனியார் மருத்துவக்கல்லூரிகள் சிறுபான்மை அந்தஸ்து பெற்றுள்ளதாகக் கூறுகின்றன. ஆனால் அதில் உண்மையில்லை. அக்கல்லூரிகளிடம் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்களை பெற வேண்டும். குறிப்பாக 83 எம்பிபிஎஸ் இடங்களைப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவ, மாணவியரிடம் அதிக கல்விக் கட்டணத்தை வசூலிப்பதால், ஏழை, எளிய மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள், இடையிலேயே கல்லூரியை விட்டுச் செல்லும் நிலை உள்ளது. அரசு இதில் தலையிட்டு கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.
     நீட் தகுதித் தேர்வு: நீட் தகுதித் தேர்வால் புதுச்சேரி மாணவ மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு இப்பிரச்னையில் தங்களால் தலையிட முடியாது எனக் கூறுகிறது. நீட் தகுதித் தேர்வு முறையை கைவிடுவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
     இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றார் பெருமாள்.

    kattana sevai