சுடச்சுட

  

  அரசு மகளிர் கல்லூரியில் ஒரு நாள் சிறப்புச் சந்தை

  By புதுச்சேரி,  |   Published on : 21st September 2016 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக்கல்லூரி முன்னாள் மாணவியர் சங்கம் சார்பில் நன்கொடை திரட்டுவதற்கான ஒரு நாள் சிறப்புச் சந்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவியர் சங்கம் கல்லூரி முன்னேற்றம் மற்றும் மாணவியர் நலனுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
   இதற்கு நிதி திரட்டும் வகையில் ஒரு நாள் சந்தை நடத்தப்படுகிறது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு முதல்வர் சசிகாந்த தாஸ் தலைமை வகித்தார். முத்தியால்பேட்டை எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் சிறப்புச் சந்தையை தொடங்கி வைத்தார். உயர்கல்வித் துறை இயக்குநர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி முன்னிலை வகித்தார்.
   ஒரு நாள் சந்தையில் கல்லூரி மாணவியர் சார்பில் 60 விற்பனை அரங்குகளும், தனியார் சார்பில் 20 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு வகை உணவுப் பொருள்கள், ஆடைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டன. ஒரு நாள் சந்தையின் விற்பனை மூலம் கிடைக்கும் நிதி, முன்னாள் மாணவியர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு பல்வேறு நலப்பணிகள் நிறைவேற்றப்படும். முன்னாள் மாணவியர் சங்கத் தலைவர் ரசியா, செயலர் ரஜினி, பொருளர் ஜோஸ்பின் நிர்மலா, உள்பட பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai