சுடச்சுட

  

  ஆட்டோ தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு அரசு முக்கியத்துவம் தராதததே வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு காரணம் என அதிமுக புகார் கூறியுள்ளது.
   இதுதொடர்பாக சட்டப்
   பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
   புதுச்சேரியில் ஆட்டோ கட்டணங்களை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய அரசு அதற்கான எந்தவொரு சட்ட ரீதியான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஆட்டோ கட்டணம் முறைப்படுத்துதல், பார்க்கிங் வசதிகள், ஆட்டோவில் பயணிப்பாளர் எண்ணிக்கை, நலவாரியம் போன்றவை சம்பந்தமான அரசின் எந்த அறிவிப்பும் சட்ட ரீதியான செயல்வடிவம் பெறவில்லை.
   இதனால் முறைகேடுகள் தடுக்கப்படாமல், பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
   ஆட்டோ தொழிலாளர்களின் பிரச்னையை அரசு கவனத்தில் கொள்ளாததே புதன்கிழமை நடைபெற உள்ள வேலை நிறுத்தத்துக்கான முதல் காரணம்.
   எனவே, அவ்வப்போது ஏற்படும் பெட்ரோல் உயர்வைக் கருத்தில் கொண்டு, மக்கள் பிரதிநிதி, ஆட்டோ சங்க நிர்வாகிகளின் கருத்தறிந்து முறையான கட்டணத்தை நிர்ணயித்து அதனை செயல்படுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   குறைந்தபட்ச தூரம் 2 கிமீ ரூ.30 அல்லது ரூ.35, ஒவ்வொரு கூடுதல் கிமீ.க்கு ரூ.15 என மக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் அன்பழகன்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai