சுடச்சுட

  

  ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு நேரடி சேர்க்கை

  By புதுச்சேரி,  |   Published on : 21st September 2016 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி, லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நிகழ் கல்வியாண்டில், பட்டயப் படிப்பில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்களை நேர்காணல் முறையில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
   இதற்காக புதுச்சேரி பிராந்தியத்தைச் சேர்ந்த கீழ்க்காணும் பாடப்பிரிவுகளை பயின்று தகுதியான மாணவ, மாணவியர் வருகிற 26ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்க உள்ள நேர்முக சேர்க்கைக்கு வரவேற்கப்படுகின்றனர்.
   மேல்நிலைப் வகுப்பில் கலைப்பிரிவு பாடத்தில் 45 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் தேர்ச்சி பெற்ற முன்னரே விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எம்பிசி இட ஒதுக்கீட்டில் 2 இடங்களும், மிக பிற்படுத்தப்பட்டோர் இபிசி இட ஒதுக்கீட்டில் ஓர் இடமும், அட்டவணை இனத்தவருக்கு 3 இடங்களுக்கான சேர்க்கையும் நடைபெறவுள்ளது.
   தொழிற்பாடப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு பிடி ஓர் இடமும் நிரப்பப்பட உள்ளது. பட்டயப் படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் நேர்முக சேர்க்கையில் கலந்து கொள்ளலாம் என கல்வித்துறை இயக்குநர் ல.குமார் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai