சுடச்சுட

    

    புதுச்சேரி சுற்றுச்சூழல் கல்விக்கழகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக ஓசோன் நாள் விழா லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     முதல்வர் எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். அறிவியல் தொழில்நுட்பத் துறை அலுவலர் சீனுவாசராகவராவ் வாழ்த்திப் பேசினார். பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர் கே.ராஜேந்திரன் ஓசோன் படலம் ஒளிப்படம் மூலம் விளக்கினார்.
     சுற்றுச்சூழல் கல்விக்கழகத் தலைவர் சிவகணபதி, விரிவுரையாளர் மோகன்ராஜ் கலந்து கொண்டனர். பல்வலிப்பூண்டு, அஸ்வகந்தா, தழுதாழை, சோற்றுக்கற்றாழை, பப்பாளி, கீரை, ஆரோ ரூட், பிரண்டை, முப்பிரண்டை, உருட்டை பிரண்டை, செங்காந்தன், துளசி, கருந்துளசி, கள்ளி வகைகள் உள்ளிட்ட அரிய வகை மூலிகைகள் அடங்கிய தோட்டம் புதிதாக அமைக்கப்பட்டது.
     சுற்றுச்சூழல் கல்விக்கழக நிறுவனர் ராமநாதன் மூலிகைகள் சிறப்புகள் குறித்து விவரித்தார். ஆசிரியர் பயிற்றுநர் திருநாராயணன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai