சுடச்சுட

  

  ஏடிஎம் ரகசிய எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம்: காவல்துறை அறிவுரை

  By புதுச்சேரி,  |   Published on : 21st September 2016 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏடிஎம் ரகசிய எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம் என புதுச்சேரி சிபிசிஐடி போலீஸ் எஸ்பி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
   இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: புதுச்சேரி மக்கள் சைபர் குற்றவாளிகளிடம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வங்கிக் கணக்கு சம்பந்தப்பட்ட ரகசிய எண்கள், குறியீடுகளை உறவினர்கள் உள்பட யாரிடத்திலும் தெரிவிக்க வேண்டாம். வங்கிக் கணக்கு சம்பந்தப்பட்ட ரகசிய குறியீடு மற்றும் எண்களை எந்த வங்கி அதிகாரியும் எந்த சூழ்நிலையிலும் தொலைபேசியில் கேட்க மாட்டார்கள். அவ்வாறு கேட்கவும் கூடாது.
   எனவே, யாரிடமும் அவற்றை கூறாதீர்கள். உங்களது வங்கிக்கணக்கு சம்பந்தப்பட்ட ரகசிய குறியீட்டையும், எண்களையும் யாராவது தொலைபேசியில் கேட்டால் உங்களது வங்கி அதிகாரியை உடனே அணுகி, உங்களது பணம் திருடப்படுவதை தடுக்க வேண்டும்.
   வங்கிக் கணக்கு சம்பந்தப்பட்ட விவரங்களை கனிவாகப் பேசும் சைபர் குற்றவாளிகளிடம் போனில் கூறி பணத்தை இழக்காதீர்கள். உங்களுடைய டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளை மற்றவர்களிடம் கொடுத்து பணத்தை ஏமாறாதீர்கள். ஏடிஎம் மைங்களுக்கு செல்லும் போது ஏடிஎம் மெஷினில் ஏதேனும் வழக்கத்துக்கு மாறான சந்தேகப்படும்படியான உபகரணங்கள் தென்பட்டால் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai