சுடச்சுட

  

  காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு புதுவை முதல்வர் வரவேற்பு

  By புதுச்சேரி,  |   Published on : 21st September 2016 10:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டுமென, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
   இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை இரவு கூறியது:
   காவிரி நதி நீர் பிரச்னையில், கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விகிதாசாரத்தின்படி நீரை விடுவிக்காமல், பிரச்னை செய்து வருகிறது. பின்னர், உச்சநீதிமன்றம் நீரை விடுவிக்க உத்தரவிட்டால், அங்கு ஏற்படும் வன்முறைச் சம்பவங்களால், அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
   ஏற்கெனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு அதை அமைக்காமல் இருந்ததால், காவிரி பிரச்னை நீடித்து வந்தது. தற்போது 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, வரவேற்புக்குரியது.
   காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரியான விகிதாசாரத்தின்படி காவிரி நீர் தமிழகத்துக்கும், புதுவைக்கும் கிடைக்கும் என்றார் நாராயணசாமி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai