சுடச்சுட

    

    குப்பைக் கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்: மதுக்கடைகளுக்கு எச்சரிக்கை

    By புதுச்சேரி  |   Published on : 21st September 2016 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குப்பைக் கழிவுகளை கொட்டும் மதுக் கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என துணை ஆணையர் (கலால்) டி.ஆபேல் ரொசாரியோ எச்சரித்துள்ளார்.
     புதுச்சேரி, வில்லியனூர் அடுத்த கோட்டைமேடு கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஆய்வுக்குச் சென்ற துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அங்கிருந்த மதுபானக்கடையைச் சுற்றிலும் மதுபாட்டில்கள், குப்பைக்கழிவுகள் போடப்பட்டிருந்தன. இதுதொடர்பாக பொதுமக்கள் ஆளுநரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் அந்தக் கடையின் உரிமத்தை தாற்காலிகமாக ரத்து செய்ய ஆளுநர் உத்தரவிட்டார்.
     இந்த நிலையில், துணை ஆணையர் (கலால்) டி.ஆபெல் ரொசாரியோ வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     துணைநிலை ஆளுநர் உத்தரவின்படி, வில்லியனூர் கோட்டைமேடு மதுக் கடையைச் சென்று பார்வையிட்டேன். சுற்றுப்புறம் மிகவும் குப்பைகளுடன் காணப்பட்டது. பிளாஸ்டிக் கோப்பைகள், மதுபாட்டில்கள் வீசப்பட்டிருந்தன. இதனால் அந்த மதுபானக்கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
     தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து மதுபானக் கடைகளும் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அனைத்து மதுபான உரிமதாரர்களும் தங்கள் கடைகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும.
     குப்பைகள், மதுபாட்டில்கள் காணப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கலால் சட்டத்தின்படி ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றார் ரொசாரியோ.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai