சுடச்சுட

  

  தேசிய செயற்குழுக் கூட்டம்: புதுவை பாஜக நிர்வாகிகள் இன்று கேரளம் பயணம்

  By புதுச்சேரி,  |   Published on : 21st September 2016 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாஜக தேசிய செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரி மாநில நிர்வாகிகள் புதன்கிழமை கேரளம் புறப்பட்டுச் செல்கின்றனர்.
   கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பாஜக தேசிய செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் நடக்கின்றன. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள், மாநில முதல்வர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
   இதில் 23ஆம் தேதி நடைபெறும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் புதுவை மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் கலந்து கொள்கிறார். 24, 25 ஆம் தேதிகளில் நடைபெறும் தேசிய பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலர்கள் தங்க.விக்கிரமன், எஸ்.ரவிச்சந்திரன், மையக்குழு உறுப்பினர்கள் எம்.விஸ்வேஸ்வரன், ஆர்.கேசவலு, கே.தாமோதரன், செயலர் எம்.அருள்முருகன், பொருளாளர் கேஜி.சங்கர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
   இதுகுறித்து பொதுச் செயலர் தங்க.விக்ரமன் கூறுகையில், இக்கூட்டத்தில் புதுவை மாநிலத்தில் கட்சியின் எதிர்காலத் திட்டம், அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் புதுவையில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இதனால் மாநில அரசின் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு தொடர்பாகவும் பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவிக்கப்படும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai