சுடச்சுட

  

  நிதி நிறுவன உரிமையாளர் கொலை வழக்கு: 7 பேர் கைது

  By புதுச்சேரி  |   Published on : 21st September 2016 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அருகே நிதி நிறுவன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
   வில்லியனூர், உத்தரவாகினிப்பேட்டையைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் (37). நிதி நிறுவனம் உரிமையாளரான இவர், கடந்த 17ஆம் தேதி, ஒதியம்பட்டு, ஐஓசி கிட்டங்கி அருகில் வெட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். வில்லியனுôர் போலீஸார் வழக்குப் பதிந்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.
   இந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக ஒதியம்பட்டு பள்ளத் தெருவைச் சேர்ந்த அருண் (எ) அருண்குமார் (21), உத்தரவாகினிப்பேட்டை மேட்டுத் தெரு கட்ட விஜி (19), உத்தரவாகினிபேட் மாரியம்மன் கோயில் வீதி சுபாஷ் (24), இவரது சகோதரர் சுரேஷ் (20), அதே ஊரைச் சேர்ந்த அம்பேத்கர் தெரு புகஷ் (எ) புகஷ்குமார் (21), வில்லியனூர் ஏழுமலை (19), கடலூர் மாவட்டம், சிங்கிரிகுடி விஜய் (23) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
   இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: உத்தரவாகினிப்பேட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளும் தொழில் செய்து வந்துள்ளார். அவரிடம் வேலை செய்த இளைஞர்கள் சுயமாக மணல் அள்ளும் தொழில் செய்யும் பொருட்டு, மாட்டு வண்டி வாங்க மோகன்தாஸ் நிதி உதவி செய்துள்ளார்.
   இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், மோகன்தாûஸ தாக்கியுள்ளார். இது தொடர்பாக பாலகிருஷ்ணன் மீது, வில்லியனூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
   இதனிடையே கடந்த 16ஆம் தேதி இரவு, தனது வீட்டில் இருந்த பாலகிருஷ்ணனையும் அவரது சகோதரியையும் 3 பேர் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனை அறிந்த பாலகிருஷ்ணனின் நண்பர்கள், இச்சம்பவத்தில் மோகன்தாஸ் தான் ஆள்களை ஏவி கொல்ல முயற்சித்துள்ளதாக கருதி, அவரை கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai