சுடச்சுட

    

    பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

    By புதுச்சேரி  |   Published on : 21st September 2016 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் சார்பில் பொதுமேலாளர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
     மாவட்டத் தலைவர்கள் எஸ்.சங்கரன், டி.மணிக்கண்ணன் தலைமை தாங்கினர்.
     காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய மாற்றத்துக்கான பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும், 1.1.2000 முதல் நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும், அனைத்துப் பதவி உயர்வு தேர்விலும் எஸ்சி, எஸ்டி. ஊழியர்களுக்கு தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும்.
     மருத்துவப்படி, சுற்றுலாப் படிகளை வழங்க வேண்டும், கால்சென்டர்களை பிஎஸ்என்எல் ஊழியர்களைக் கொண்டே நடத்த வேண்டும், தொலைத்தொடர்புத் துறை ஆலைகளை புனரமைத்து இயக்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 24 அம்சக் கோரிக்கைகள் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
     நிர்வாகிகள் ஏ.சுப்பிரமணியன், என்.கொளஞ்சியப்பன், கே.சந்திரசேகரன், எஸ்.ஜெயராமன், டி.தயாளன் சசிகலா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொருளர் ஏ.முருகையன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai