சுடச்சுட

  


  புதுச்சேரி பூர்வீக குடிமக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு வழங்கவும் பிரெஞ்சிந்திய ஒப்பந்தத்தை செயல்படுத்தவும் வலியுறுத்தி, பிரெஞ்சு தூதரகம் அருகே சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   முன்னதாக, மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலர் ஜெகநாதன் தலைமையில் தமிழர் தேசிய இயக்கம் அழகிரி, மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், தமிழர் களம், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம், பூர்வீக குடிமக்கள் உரிமை பாதுகாப்பு பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் அறிவியல் மன்றம் உள்ளிட்ட சமூக ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரி தபால் நிலையம் அருகே கூடி, அங்கிருந்து அவர்கள் தலைமைச் செயலகம் அருகில் உள்ள பிரெஞ்சு தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாகச் சென்றனர்.
   செட்டித்தெரு, வைசியால் வீதி வழியாக சென்ற அவர்களை பிரெஞ்சு தூதரகம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   பின்னர் முக்கிய நிர்வாகிகள் பிரெஞ்சு தூதரகம் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai