சுடச்சுட

  

  பெண்கள் முத்ரா கடனை பெற்று பயனடைய வேண்டும்: அமைச்சர் அறிவுரை

  By புதுச்சேரி,  |   Published on : 21st September 2016 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண்கள் சுயவேலை வாய்ப்பு பெறும் பொருட்டு, மத்திய அரசின் முத்ரா கடனைப் பெற்று பயனடைய வேண்டும் என வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்தார்.
   புதுச்சேரி ஹோப் தொண்டு நிறுவனத்தின் 20-ஆம் ஆண்டு விழா கனகசெட்டிக்குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
   வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜஹான் கலந்து கொண்டு, நம்பிக்கை பெண்கள் கூட்டமைப்பின் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அவர் பேசுகையில், பெண்கள் சுயவேலை வாய்ப்பிற்காக மத்திய அரசின் முத்ரா கடனைப் பெற்று பயனடைய வேண்டும்.
   மேலும் கடலோர கிராமங்களின் பாதுகாப்புக்காக கடலோரங்களில் சவுக்கு மரங்களை நட வேண்டும். அலையாத்திக் காடுகளை உருவாக்க வேண்டும்.
   மேலும் தனி நபர் கழிப்பறைகள் கட்ட இந்த ஆண்டு காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் நபருக்கு ரூ. 20,000 வழங்கப்படும். அடுத்த ஆண்டு புதுச்சேரியில் வழங்கப்படும் என்றார்.
   ஹோப் இயக்குநர் ஜோசப் விக்டர் ராஜ் அறிமுகவுரை ஆற்றினார். காலாப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மேரி எப்சா பாய் மற்றும் கிராம பெரியவர்கள் வாழ்த்துரை வழங்கினர். ஹோப் நிர்வாகி மேரி விக்டோரியா மற்றும் நம்பிக்கை பெண்கள் கூட்டமைப்பு ஆலோசகர்கள் பச்சைவள்ளி, ருக்மணி, நிர்வாகிகள் ஜெயலட்சுமி, தனலட்சுமி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai