சுடச்சுட

  

  வேலைநிறுத்தம்: தொமுச, ஐஎன்டியுசி பங்கேற்பு இல்லை

  By புதுச்சேரி,  |   Published on : 21st September 2016 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆட்டோ தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் தொமுச, ஐஎன்டியுசி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
   இதுதொடர்பாக புதுச்சேரி தெற்கு மாநில திராவிட முன்னேற்றக் கழக அமைப்பாளரும், தொமுச ஆட்டோ தொழிற்சங்க கெüரவத் தலைவருமான இரா. சிவா எம்.எல்.ஏ., மற்றும் புதுச்சேரி மாநில ஐஎன்டியுசி தலைவரும், ஆட்டோ தொழிற்சங்க கவுரவத் தலைவருமான ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
   புதுச்சேரி மாநிலத்தில் இயங்கிவரும் பல்வேறு ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள், தங்களின் பலதரப்பட்ட கோரிக்கைகளான ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரியம் அமைத்தல், ஜிபிஆர்எஸ் மீட்டரை அரசே இலவசமாக அளித்தல், குறைந்தபட்ச ஆட்டோ கட்டணமாக ரூ. 40 நிர்ணயித்தல், தீபாவளி ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கல் போன்றவைகளை அரசுக்கு முன்வைத்தன.
   இவைகளை திராவிட முன்னேற்றக் கழக தொழிற்சங்கமும், காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசியும் ஆதரித்து, இந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சென்று முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
   இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் நாராயணசாமி கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்துள்ளார்.
   இதனை அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் ஏற்றுக்கொண்டு முதல்வர் மற்றும் அமைச்சரவைக்கு நன்றி தெரிவித்துள்ள நிலையில், அரசியல் நோக்கத்தோடு அறிவிப்பு செய்த இந்த வேலைநிறுத்தத்தை திமுக ஆட்டோ தொழிலாளர் சங்கமும், காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசியின் ஆட்டோ தொழிலாளர் சங்கமும் முழுமையாக புறக்கணிப்பதுடன், அன்றைய தினம் தங்களது ஆட்டோக்களை இயக்கி பொதுமக்களுக்கு சேவை செய்யும் எனத்தெரிவித்தனர்.
   ஐஎன்டியுசி ஆட்டோ தொழிற்சங்க தலைவர் லிபாகரன், துணைத் தலைவர் ராஜா, செயலாளர் விண்சென்ட், திமுக ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் தொமுச மாநில தலைவர் அண்ணா அடைக்கலம், செயலர் அன்பழகன் உடனிருந்தனர்.
   அதே போல அண்ணா தொழிற்சங்கப் பேரவையும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்காது என அதன் மாநிலச் செயலர் பாப்புசாமி தெரிவித்துள்ளார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai