சுடச்சுட

  

  வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது.
   மாநிலத் தலைவர் ஜே.குமரவேல் தலைமை தாங்கினார். செயலர் இரா.அந்தோணி முன்னிலை வகித்தார்.
   இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் ஆர்.விஸ்வநாதன், நிர்வாகிகள் மு.சலீம், டி.வாஞ்சிநாதன், எஸ்.எழிலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பொருளர் சி.பிரபு நன்றி கூறினார்.
   போராட்டத்தின்போது, ஏராளமான படித்த இளைஞர்கள் நாகரீக ஆடை அணிந்து, சுப்பையா சிலை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மறைமலையடிகள் சாலை வழியாக வீதியில் இறங்கி குப்பையை பொறுக்கினர்.
   புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்காமல், அரசுத் துறைகளில் முறைகேடாக ஆள்கள் நியமிக்கப்படுவதாகவும், இளைஞர்களுக்கு படிப்புக்கேற்ற வேலையை அரசு வழங்க வேண்டும், வேலையில்லாத இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க, பிணையின்றி வங்கி மற்றும் அரசு மேம்பாட்டுக் கழகங்கள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும், ஆலைகளில் உள்ளூர் இளைஞர்கள் 60 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும், ஏஎப்ஃடி, பாரதி, பஞ்சாலைகளை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நூதனப் போராட்டம் நடைபெற்றது.
   கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் மாநிலம் முழுவதும் இளைஞர்களை திரட்டி மாபெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai