சுடச்சுட

  

  அகில இந்திய குத்துச் சண்டை: புதுவை மாணவர்கள் சாதனை

  By புதுச்சேரி,  |   Published on : 22nd September 2016 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரளத்தில் நடைபெற்ற அகில இந்திய குத்துச் சண்டைப் போட்டியில் புதுச்சேரி எம்ஐடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
   கேரள மாநிலம், எர்ணாகுளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டரங்கில் அண்மையில் இப்போட்டிகள் நடைபெற்றன.
   இதில், மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, மெக்கானிக்கல் துறை நவநீத்குமார் 60 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கமும், பிரித்திவிராஜ் 70 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கமும், எலக்ட்ரானிக்ஸ் துறை சிவபிரசாத் 47 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
   இம்மாணவர்களை கல்லூரித் தலைவர் எம்.தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலர் கே.நாராயணசாமி, முதல்வர் எஸ்.மலர்க்கண், துறைத் தலைவர்கள் பி.ராஜாராம், எஸ்.அருண்மொழி, ஆகியோர் பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் ஏ.தமிழ்ச்செல்வன் செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai