சுடச்சுட

    

    சாலை விபத்தில் பள்ளிச் சிறுமி சாவு: 2 சிறுவர்கள் காயம்

    By புதுச்சேரி,  |   Published on : 22nd September 2016 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில், சென்ற டிராக்டர் மீது, இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளிச் சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார். இரு சிறுவர்கள் காயமடைந்தனர்.
     கடலூர் மாவட்டம், கலையூர் அஞ்சல் இரண்டாயிரம் விளாகம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர், விவசாயி. இவரது மகள் தேவஸ்ரீ (7), மகன் பிரதீப் (6). புதுவை அருகில் உள்ள ஒரு பள்ளியில் தேவஸ்ரீ 2ஆம் வகுப்பு படித்து வந்தார். பிரதீப் முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.
     புதன்கிழமை காலை சந்திரசேகரின் 16 வயது உறவினர் தேவஸ்ரீ, பிரதீப் மற்றும் உறவினர் குழந்தை மனோஜ் ஆகியோரை தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.
     வாகனம் குருவிநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலை அருகே சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் 3 குழந்தைகளும் காயமடைந்தனர். இவர்களில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் தேவஸ்ரீ உயிரிழந்தார். பிரதீப், மனோஜ் ஆகியோர் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போக்குவரத்து போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai