சுடச்சுட

  

  புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக கடல் பகுதியில், மீன்கள் செத்து மிதந்தது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
   தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் மற்றும் அதனை ஒட்டிய கடற்கரையோரப் பகுதியில், புதன்கிழமை மத்தி மீன்கள் அதிகளவில் செத்து மிதந்தன.
   அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதையடுத்து, மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள் செத்துக் கிடந்த மீன்களை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.
   காவிரி பிரச்னை காரணமாக, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பனிக்கட்டி பெட்டிகளில் வெகுநாள்களாக தேக்கி வைத்திருந்த மீன்கள் கடலில் வீசப்பட்டனவா என்றும் கடலில் கழிவுநீர் கலப்பதன் காரணமாக, மீன்கள் செத்து மிதந்தனவா என்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai