சுடச்சுட

    

    நாராயணசாமி வெற்றிக்குப் பாடுபட நெல்லித்தோப்பு தொகுதி திமுக முடிவு

    By புதுச்சேரி,  |   Published on : 22nd September 2016 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் நாராயணசாமி வெற்றிக்கு தீவிரமாக பாடுபட வேண்டும் என அத்தொகுதி, திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
     நெல்லித்தோப்பு தொகுதி திமுக கிளை நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தெற்கு மாநில திமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
     புதுச்சேரி தெற்கு மாநில கழக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் ஆர்.வீ. ஜானகிராமன் முன்னிலை வகித்தார். தொகுதிச் செயலர் நடராஜன் வரவேற்றார்.
     மாநில துணை அமைப்பாளர்கள் குணாதிலீபன், அமுதாகுமார், பொருளர் குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், சரவணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி, டாக்டர் மாயகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் வேலவன், மாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.
     கூட்டத்தில், கடந்த ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேட்டையும், நிதிப் பற்றாக்குறையையும் சரிசெய்து சட்டம், ஒழுங்கை முறைப்படுத்தி தொழிற்கொள்கை மூலம் புதிய தொழில் வரவை ஊக்கப்படுத்தி வேலைவாய்ப்புக்கு வழி ஏற்படுத்தி காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக்கு நல்ல தொடக்கத்தை முதல்வர் நாராயணசாமி தந்துள்ளார்.
     நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவாக பிரசாரத்துக்கு கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை அழைக்க வேண்டும்.
     நெல்லித்தோப்பு தொகுதியில் திமுக சார்பில் கட்டப்பட்டு வரும் படிப்பகம் மற்றும் தொகுதி அலுவலகத்தை விரைவாக திறந்து தேர்தல் பணி ஆற்ற வேண்டும்.
     தொகுதியில் மின்பற்றாக்குறை, குடிநீர் பற்றாக்குறைகளை போக்குவது, கழிவுநீர் தேங்குவதை சரிசெய்வது, புதை சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவது, செயல்படாமல் உள்ள சமுதாயக்
     கூடத்தை திறக்கச் செய்வது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பன
     உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai