Enable Javscript for better performance
நியாயமான ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நியாயமான ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்க வலியுறுத்தல்

    By புதுச்சேரி,  |   Published on : 22nd September 2016 08:37 AM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரியில் இரு சக்கர வாகன வாடகை நிலையங்களுக்கு அனுமதி தரக்கூடாது என டாக்டர் அப்துல்கலாம் புதுச்சேரி தொழிலாளர் கூட்டமைப்புத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா வலியுறுத்தி உள்ளார்.
     ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து முத்தரப்பு குழு மூலம் கட்டணத்தை நிர்ணயிக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்தக் குழுவில் தகுதியான ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும், அரசு அதிகாரிகளையும் பங்கேற்கச் செய்து குறைந்தபட்சம் 1.8 கிமீ-க்கு ரூ.50 நிர்ணயம் செய்ய வேண்டும்.
     அதன்பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் ஜி.பி.ஆர்.எஸ். மீட்டரை இலவசமாக ஆட்டோக்களுக்கு வழங்க வேண்டும். சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் இரு சக்கர மோட்டார் சைக்கிள் வாடகை நிலையங்களை தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார் பிரான்சுவா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai