சுடச்சுட

  

  "நீட்' மாணவர்-பெற்றோர் சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

  By புதுச்சேரி,  |   Published on : 22nd September 2016 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நீட் மாணவர் பெற்றோர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
   தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாநில அரசு துணை
   போவதாகக் கூறியும், அரசின் போக்கைக் கண்டித்தும் நீட் மாணவர் பெற்றோர் நலச் சங்க கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம், தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்றது.
   கூட்டமைப்பு நிர்வாகிகள் பாலா, ஜெகந்நாதன், வீரமணி, சுகுமார் மற்றும் பெற்றோர், மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
   போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ. ஆ.அன்பழகன் பேசியது:
   புதுவையில் மருத்துவம் சார்ந்த இடஒதுக்கீடு, கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அத்துமீறலுக்கு ஆண்ட மற்றும் ஆளும் அரசுகள் கடந்த 15 ஆண்டுகளாக துணை போகின்றன. இதனால் புதுவையைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
   50 சதவிகித மருத்துவ இடமும், மருத்துவ உயர் வகுப்பில் இடமும் பெறுவோம் என வாக்குறுதி கொடுத்த காங்கிரஸ், இன்று 25 சதவிகித இடத்தை மட்டுமே பெற்றுள்ளது. இதே போல 252 மருத்துவ உயர்கல்வியில் ஒரு இடத்தைக் கூட அரசு பெறவில்லை.
   இந்தாண்டு, நீட் தேர்வில் 200 மாணவர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர். இதேபோன்று அடுத்த ஆண்டும் 200 மாணவர்கள் தேர்வானால் அரசின் இடஒதுக்கீடான 432 இடங்களைக் கூட புதுவை மாணவர்களை கொண்டு நிரப்ப முடியாது. இதனால் இதுவரை இருந்த எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி. இடஒதுக்கீட்டையும் பெற முடியாத நிலை ஏற்படும். தனியார் கல்லூரிகளில் கட்டண உயர்வுக்கும், முறைகேட்டுக்கும் மாநில அரசு துணை போகிறது. பெற்றோர்}மாணவர் நலச்சங்கம் மாணவர்களுக்காக நடத்தும் அனைத்துப் போராட்டத்துக்கும் அதிமுக துணை நிற்கும் என்றார் அன்பழகன்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai