சுடச்சுட

    

    புதுவை மத்திய பல்கலை.க்கு நிரந்தர துணைவேந்தர் நியமிக்கப்படுவாரா?

    By நமது நிருபர், புதுச்சேரி,  |   Published on : 22nd September 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மத்திய பல்கலை. செயல்பாடுகள் மேலும் செம்மையாக நடைபெற, நிரந்தர துணைவேந்தர் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
    ,  கடந்த 1985-ம் ஆண்டு காலாப்பட்டில் தொடங்கப்பட்ட புதுச்சேரி மத்திய பல்கலை.யின் கீழ் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான்-நிகோபர், லட்சத்தீவுகளில் உள்ள மொத்தம் 92 கல்லூரிகள் இயங்குகின்றன.
     புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மட்டும் 6,500 பேர் பயில்கின்றனர். நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் 10ஆவது இடத்தில் உள்ள இப்பல்கலை.யில் வைஃபை இணைய வசதியுடன் 15 பள்ளிகள், 37 துறைகள், 2 இருக்கைகள், 144 முதுகலை பட்ட ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. இதன் கிளை வளாகங்கள் போர்ட் பிளேர், காரைக்காலில் அமைந்துள்ளன.
     தென்னிந்தியாவில் சிறந்த கல்வி நிலையமாக விளங்கும் இந்த பல்கலை.யின் துணைவேந்தராக
     2013-ஆம் ஆண்டு டாக்டர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி பதவியேற்றார். அவர் மீது எழுந்த புகார்கள் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டது. இதில் புகார்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கட்டாய விடுமுறையில் செல்ல உத்தரவிடப்பட்டது. பின்னர் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
     மூத்த டீனாக இருந்த அனிசா பஷீர்கான் துணைவேந்தர் பொறுப்பை கடந்த ஓராண்டாக, வகித்து வருகிறார். எனினும் முக்கிய முடிவுகளை நிரந்தர துணைவேந்தரே எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது.
     எனவே பல்கலை.க்கு நிரந்தர துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என கல்வியாளர்கள், மாணவர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
     இதுகுறித்து இந்திய மாணவர் சங்க புதுவை மாநிலச் செயலர் ஆ.ஆனந்து கூறியது:
     பொறுப்புத் துணைவேந்தராக டாக்டர் அனிசா பஷீர் கான் நியமிக்கப்பட்டு ஓராண்டாக செயல்படுகிறார். தற்போது பல்கலைக்கழகம் சீராக நடைபெற்று வருகிறது. எனினும்,நிரந்தர துணைவேந்தர் நியமிக்கப்பட்டால் தான் பல்கலை. பணிகள் மேலும் செம்மையாக தங்கு தடையின்றி நடைபெறும். மத்திய அரசு விரைவில் இதற்கான தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai