சுடச்சுட

  

  மயானத்தில் இளைஞர் கொலை: பெங்களூரில் பதுங்கிய இருவர் கைது

  By புதுச்சேரி,  |   Published on : 22nd September 2016 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அருகே மயானத்தில், தலையில் கல்லைப் போட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பெங்களூரில் பதுங்கியிருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
   புதுவை அரியாங்குப்பம் ஆர்.கே. நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது சகோதரர் சரவணன். மதுப்பழக்கமுடைய இவர், குடும்பத்தை கைவிட்டு, செட்டிக்குளம் மயானத்திலேயே தங்கிருந்து, குழி தோண்டும் நபருக்கு உதவியாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவர், கடந்த 18ஆம் தேதி மயானப் பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
   இது குறித்து அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் (எ) ரமணா (19) என்பவருக்கும் சரவணனுக்கும் அடிக்கடி மதுபோதையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து ரமணா, தனது சகோதரர் முருகன் (எ) முருகவேலுடன் (23) சேர்ந்து சரவணன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பெங்களூரில் பதுங்கியிருந்த இருவரையும் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai