சுடச்சுட

  

  மினி வேன் மீது பேருந்து மோதல்: பெண் சாவு; ஊர்க்காவல் படை வீரர் உள்பட இருவர் காயம்

  By புதுச்சேரி,  |   Published on : 22nd September 2016 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி அருகே மினிவேன் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தார். அவரது மகன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் காயமடைந்தனர்.
   வில்லியனூர் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த பாவாடைராயன் மனைவி வள்ளியம்மாள் (42). கறிவேப்பிலை விற்பனை செய்து வந்தார்.
   புதன்கிழமை வழக்கம்போல் மினி வேனில், வள்ளியம்மாள் கறிவேப்பிலை விற்பனை செய்ய கடலுôர்-புதுச்சேரி சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தார். வேனை, அவரது மகன் அய்யனார் ஓட்டினார். வள்ளியம்மாள், மினிவேனின் பின்பக்கக் கதவை திறந்தபடி உட்கார்ந்து பயணித்தார். அதில் ஊர்க்காவல்படை வீரரான சுகுமார் என்பவர், லிப்ட் கேட்டு அமர்ந்து வந்தார்.
   மினி வேன் கிருமாம்பாக்கம் தனியார் கார் பழுது நீக்கும் நிலையம் அருகே சென்ற போது, சாலையோரம் நின்றிருந்த காரை, அதன் ஓட்டுநர் திடீரென எடுத்துள்ளார்.
   அப்போது, அந்த காரின் மீது மோதாமல் இருக்க, மினிவேனை அய்யனார் சற்று திருப்பியுள்ளார். அந்த வேளையில், பின்னால் வந்தகொண்டிருந்த தனியார் பேருந்து, மினிவேன் மீது மோதியது.
   இதில் மினிவேனிலிருந்து வெளியே தூக்கிவீசப்பட்ட வள்ளியம்மாள் மீது பேருந்து ஏறி, பழுதுபார்க்கும் நிலையத்திலிருந்து வெளியே வந்த கார் மீது மோதி நின்றது. அதே நேரத்தில் விபத்தில் சிக்கிய மினிவேன், முன்னால் சென்ற கார் மீது மோதி நின்றது.
   இந்த விபத்தில் வள்ளியம்மாள், அய்யனார், ஊர்க்காவல்படை வீரர் சுகுமார் ஆகியோர் காயமடைந்தனர். புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த மூவரில், வள்ளியம்மாளை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்துக்கு காரணமான பேருந்தின் கண்ணாடிகளை, அப்பகுதியினர் அடித்து நொறுக்கினர்.
   விபத்து காரணமாக, கடலூர்-புதுச்சேரி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை கிருமாம்பாக்கம் போலீஸார் சரி செய்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai